ஆன்லைன் குற்றங்கள் தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவுபோலீஸார் சார்பில், ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்களிடம், அலைபேசி கோபுரம் அமைப்பதால் அதிக லாபம் கிடைக்கும் என குறுந்தகவல் வருவது, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறுவது, அலைபேசி எண்ணுக்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளது, பரிசை பெற குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும் என அழைப்பு வருவது ஆகியவற்றை நம்பக்கூடாது. இதேபோல, வங்கிக் கணக்கு விவரம் உள்ளிட்ட தகவலை அலைபேசியில் யாரிடமும்தெரிவிக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago