மான்களால் பயிர்கள் சேதம் தடுக்கக் கோரி முதல்வருக்கு கடிதம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் கே.பழனி சாமிக்கு, பாரதிய கிஷான் சங்க மாவட்டத் தலைவர் மா.வேலுசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் துலுக்கமுத்தூர் பகுதியில் புள்ளி மான்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இவை விளைநிலங்களில் பயிரிடப்படும் கரும்பு, வாழை, சிறுதானியப் பயிர்களை மேய்ந்து சேதப்படுத்துகின்றன. இதேபோல அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மயில்களின்எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டது. கூட்டம்கூட்டமாக விளை நிலங்களில் புகுந்து தக்காளி, வெங்காயம், மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களை நாசம் செய்கின்றன.

ஏதாவது ஒரு காரணத்தில் விளைநிலங்களில் மானோ, மயிலோ உயிரிழந்தால் வனத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு, விவசாயிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் விளைநிலங்களுக்குள் நுழையும் மயில்கள், மான்களைத் தடுக்க வழி தெரியாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்