ஆட்சியருக்கு பொங்கல் பரிசு வழங்கியதாக குறுந்தகவல் வந்ததா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள5,88,058 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையின் குடும்ப அட்டைக்கு விழுப்புரம் சீனிவாச நகர் நியாய விலைக்கடையிலிருந்து ரூ 2,500ரொக்கப்பணம் பெற்றதாக ஆட்சியரின் மொபைலுக்கு எஸ்எம் எஸ் வந்துள்ளது. இதுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக கூறப் படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபாகரனிடம் கேட்டபோது, " ஆட்சியரிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு அவர் அட்டைக்கான பொருட்களுக்கு பில் போடுவது வழக்கம். ஆனால் நேற்று விற்பனையாளர் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் பில் போட்டுவிட்டார். இதையடுத்து வந்த எஸ்எம்எஸ் தான் குழப்பத்திற்கு காரணம். இதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை" என்று தெரிவித்தார். இதுகுறித்துமாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் கேட்ட போது, "முறைகேடு எதுவும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்