மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடலூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் குளோப், வட்ட செயலாளர் சுந்தர்ராஜன், விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், விடுதலை சிறுத்தை கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பாரா முரளி, மருத்துவ பிரதிநிதிகள் சங்க மாவட்ட செயலாளர் மருது, மக்கள் அதிகாரம் மண்டல பொறுப்பாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் குப்பம்குளத்தில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் பழனி தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், நடுவீரப்பட்டு, நத்தம் , அண்ணாகிராமம் உட்பட மாவட்டத்தில் 29 இடங்களில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago