ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 3.34 லட்சம் ஏக்கர் நெல் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் தற்போது அறுவடைக்குத் தயாராக இருந்தது. கடந்த 3 நாட்களாக, தொடர் மழை பெய்து வருவதால், நெற்கதிர்கள் சாய்ந்து அழுகியும், முளைத்தும் வருகின்றன. இந்நிலையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திருவாடானை, ஆர்.எஸ்மங்கலம், நயினார்கோவில், கடலாடி பகுதிகளில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள், மிளகாய்ச் செடிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் சாய்ந்துவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய உத்தர விட்டார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், முதற்கட்ட ஆய்வில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்தபின் முழு நிலவரம் தெரிய வரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்