புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால், 2021-2022-ம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங் குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், இயங்கும் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. இதற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவுள்ள தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒரே தொழிற்பள்ளியால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் குறித்த தகவல்களை மேற்கண்ட இணையதளம் மூலமாகவும், ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை நேரில் அணுகியும் அறிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்