திருப்பூர் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர், தற்சமயம் அறுவடை நிலையில் உள்ளது. அறுவடையாகும் நெல்லை கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
காங்கயம் பகுதியில் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், பழைய வெள்ளியம்பாளையம், மருதுறை, ஓடக்காடு, பரஞ்சேர்வழி, வேலம்பாளையம், குழலிபாளையம், தாத்திக்காடு, அலகுத்திவலசு, சாமிநாதபுரம், தாராபுரம் பகுதியில் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 1, தாராபுரம், தளவாய்பட்டணம், சத்திரம், செலாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் திறக்கப்பட உள்ளன.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ‘ஏ' கிரேடு ரகம் கிலோ ரூ.19.58-க்கு கொள்முதல் செய்யப்படும், அதற்குறிய கிரயத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு ஈ.சி.எஸ். மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்படும். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி, மேற்குறிப்பிட்ட விலைக்கு விற்று பயன் பெறலாம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago