சுற்றுலாத் துறை சார்பில் பூண்டியில் கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கோலாகலம்

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவள்ளூர் அருகே பூண்டிபஸ் நிலையத்தில் நேற்றுசுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. சக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த பொங்கல்விழாவில், பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் வகையில் கிராமிய மணம் வீசும் மண் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

மேலும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் கோலப் போட்டிகளும் இந்த பொங்கல் விழாவில் நடத்தப்பட்டன. கோலப்போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று, மண் பானையில் பொங்கல் வைத்து, கலைக் குழுவின் தப்பாட்டத்தைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கோலப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவகுமார், பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் வெங்கட்ரமணா, துணைத் தலைவர் மகாலட்சுமி, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்