தேனி அருகே கூலிப்படை மூலம் கணவரைக் கொலை செய்த மனைவியைப் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்காளை(36) நவ.2-ம் தேதி மாயமானார். இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது மர்ம நபர்கள் அவரைக் கொன்று உடலை கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
முத்துக்காளை கேரளாவில் வேலை செய்தபோது அவரது மனைவி கலையரசிக்கு மேலப்பட்டியைச் சேர்ந்த சேதுபதியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட பிரச்சினையில் கலையரசி தாய் வீடு சென்றார்.
இந்நிலையில், முத்துக்காளையை கூலிப் படையை ஏவிக் கொல்ல கலையரசியும், சேதுபதியும் கணேசன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கூலி பேசினர். முத்துக்காளையை சமாதானப்படுத்தி மனைவி, குழந்தைகளை நவ.2-ம் தேதி பைக்கில் ஊருக்குள் அழைத்து வந்தபோது வழிமறித்து அவரை மட்டும் கொன்று கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
இக்கொலையில் மூவரும் கைது செய்யப்பட்டதில் சேதுபதி, கணேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது கலையரசியையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளோம், என்று போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago