அனுமன் ஜெயந்தி விழா கோயில்களில் சிறப்பு வழிபாடு

By செய்திப்பிரிவு

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள அஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.

அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், வெண்ணை, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டக்கோயில் அருகேயுள்ள தனியார் சிமென்ட் ஆலையிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயியில் கோதண்டராமர் சன்னதியில் ராமர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மேலும், கோயில் நுழைவு வாயிலில் உள்ள கம்பத்து  ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, காப்பு அணிவித்தும், வடை, லட்டு, வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்