அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அதிமுக ஆட்சியை பெண்களே தூக்கி எறிய வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என்.அண்ணாதுரை குற்றஞ்சாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகே நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகள் திறப்பு விழா மற்றும் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என மக்கள் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந் திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2 உயர் கோபுர மின் விளக்குகளை திறந்து வைத்துப் பேசும்போது, " தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, வட மாநில இளைஞர்கள் இங்குஊடுருவியுள்ளனர். மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு, அதிமுக அரசு தான் காரணம்.

அதிமுக ஆட்சியில் அரசு வேலையில் சேருபவர்கள் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்து பணியில் சேருகின்றனர். சேர்ந்த பிறகு ஊழல் செய்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த ‘நீட்’ தேர்வு, புதிய வேளாண் சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவம் படிக்க விரும்பியமாணவர்களின் கனவு நிறைவேறா ததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதேபோல, விவசாயிகளும் புதிய வேளாண் சட்டங்களால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கைக்கூலியாக அதிமுக அரசு செயல்படுகிறது.

தமிழகத்தில் தனியார் தொழில் தொடங்க லட்சக்கணக்கில் கமிஷன் கேட்பதால் பெரிய தொழில் நிறுவ னங்கள் கர்நாடகா, ஆந்திரா போன்றமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், தமிழக இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு கிடைக் கவில்லை. பெண்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. உதாரணமாக, பொள்ளாச்சி விவகாரத்தை கூறலாம்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியை பெண்களே தூக்கி எறிய வேண்டும். 8 வழிச்சாலையும் அமைப்பதிலும் உள்நோக்கம் உள்ளது. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் இந்த ஆட்சியில் இல்லை. விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். அதன் பிறகு அமையவுள்ள திமுக ஆட்சியில் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஊழல் செய்த அதிமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்