கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம், ராசாப்பேட்டை, சத்திரம்,விசூர், கீழ்குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் மினி கிளினிக்குளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:
மினி கிளினிக், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் கொண்டு காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் சனிக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் செயல்படும். இங்கு காய்ச்சல், தலைவலி,ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்துநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். கிராமங்களில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதனை மாற்றும் வகையில் முதல்வர் இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.
கடலூர் துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டாட்சியர்கள் கடலூர் பலராமன், பண்ருட்டி பிரகாஷ்,குறிஞ்சிப்பாடி சுமதி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago