விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று விழுப்
புரம் வடக்கு மண்டல தலைவர்நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இணைய வழி லாட்டரி விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடமாவட்டங்களில் மொத்தம் உள்ள 249 காவல் நிலையங்களில் 225 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை முழுமையாக இல்லை என்ற நிலையை எட்டி யுள்ளோம்.
விழுப்புரம் காவல் துணை உட்கோட்டத்தில் அதிக காவல் நிலையங்கள் உள்ளன.
அதனை பிரித்து புதிய உட்கோட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப் பட்டுள்ளது.
விரைவில் விழுப்புரம் உட் கோட்டம் பிரிக்க வாய்ப்புள்ளது என்று கூறினார்.
விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago