கிருஷ்ணகிரியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஆசைதம்பி (31). இவரது உறவினரின் 14 வயது சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து மே மாதம் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர், சிறுமியை மீட்டு ஓசூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆசைதம்பியை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட ஆசைதம்பிக்கு போக்ஸோ பிரிவின் கீழ் 14 வருட சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், தந்தை இல்லாத சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 14 வருட சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஒரு வருட சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் என மொத்தம் 39 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago