தமிழகத்திலேயே முதல் முறையாக கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி களுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் நலவாரி யத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாநில தொழிலாளர் ஆணையர் வள்ளலார் திட்ட விளக்கவுரையாற்றினார். தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினர்.
பின்னர், அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, "திருப்பத் தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30,290 கட்டுமான தொழிலாளர்களுக்கும், 1,728 ஓய்வுபெற்ற கட்டுமான தொழி லாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் மதிப் பிலான பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (நேற்று) வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல் முறை யாக இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இதுவரை 98.45 சதவீதம் பேருக்கு வழங்கப்பட் டுள்ளது. மாநிலம் முழுவதும் 95 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் பேசும்போது, "கட்டுமான தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண் டாட 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ பாசி பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தொழிலாளர் நலவாரியம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு ரூ.94.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் செந்தில்குமார், தொழிலாளர் கூடுதல் இணை ஆணையர் யாஸ்மின்பேகம், வாணியம்பாடி ஆர்டிஓ காயத்ரி சுப்பிரமணி, மாநில கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பழனி, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago