கேரளா மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கேரளா எல்லைகளான நாடுகாணி, சோலாடிபாட்டவயல், நம்பியார் குன்னு, தாளூர்உள்ளிட்ட 7 சோதனைச் சாவடிகள்மற்றும் கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடி ஆகியவற்றில் தமிழக கால்நடைத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சிகளையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வரமுற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாட்டு தீவனங்கள், கோழித் தீவனங்கள், வளர்ப்பு பறவைகளும் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படுவதோடு, வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘‘8 சோதனைச் சாவடிகளில்ஒரு கால்நடை உதவி மருத்துவர்தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு, காவல் துறை, வனத் துறை மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்காலிகமாக அண்டை மாநிலங்களில் இருந்து கோழிகள், பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை இம்மாவட்டத்துக்குள் வாகனங்களில் ஏற்றிவர தடை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago