ஆவடி போர் ஊர்திகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்த ஆளில்லா விமானங்களுக்கான லேண்டிங் கியர்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பலுக்கான 18 வகை வடிப்பான்கள் நேற்றுக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான போர் ஊர்திகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், தபஸ் ஆளில்லா விமானத்துக்கான உள்ளிழு லேண்டிங் கியர், ஸ்விப்ட் ஆளில்லா விமானத்துக்கான லேண்டிங் கியர் மற்றும் P-75 நீர்மூழ்கிக் கப்பலுக்கான 18 வகை வடிப்பான்களை வடிவமைத்துள்ளது.
இவை ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களின் கீழ், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று ஆவடி போர் ஊர்திகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி, ஆயுதங்கள் மற்றும் போர் ஊர்திகள் பொறியியல் அமைப்பு இயக்குநர் (பொது) பிரவீண்குமார் மேத்தா, ஆவடி போர் ஊர்திகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பாலமுருகன், பெங்களூரு வானூர்தி வளர்ச்சி நிறுவன இயக்குநர் வேணுகோபால், பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago