வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த கடனுதவி வழங்கப் படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள்,சிப்பம் கட்டும் கூடங்கள், விளை பொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதி கள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங் கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு உள்கட்ட மைப்பு மேம்படுத்த முடியும்.
மேற்கண்ட உள்கட்டமைப்பு களை உருவாக்க இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரைபெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கான 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படும். சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப் பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.
இத்தகைய வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தேவைப்படும் கடன் தொகையை அதிகபட்சமாக ஆண்டுக்கு 9 சதவீதத்தில் வழங்கும் வகையில், அகில இந்திய அளவில் 13 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
தமிழகத்தில் ரூ.5,990 கோடி அளவுக்கு கடன் வசதி செய்து வேளாண்உள்கட்டமைப்புகளை உருவாக்கு வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரூ.225 கோடிக்கு கடன் வசதி செய்து வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு இலக்குநிர்ணயித்துள்ளது. இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசா யிகள், உழவா் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago