சிவகங்கை அருகே தொடர் மழையால் 500 ஏக்கரில் முளைவிட்ட நெற் கதிர்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே சக்கந்தி, கோமாளிபட்டி ஆகிய கிராமங்களில் அண்மையில் பெய்த மழையால் கண்மாய்கள் நிரம்பின. இதையடுத்து விவசாயிகள் கடன் பெற்று 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

நெற் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. நீரை வெளியேற்ற முடியாததால், நெற் பயிர்கள் அழுகி கதிர்கள் முளைவிடத் தொடங்கின.

இதுகுறித்து சக்கந்தி விவசாயி செல்வராஜ் கூறியதாவது:

இந்தாண்டு நல்ல விளைச்சல் கண்டதால் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் தொடர் மழையால் பயிர்கள் முழுவதும் அழுகின. இந்தாண்டு பயிர்க் கடன் கூட கிடைக்கவில்லை. விவசாயத்துக்காக நகைகள், நிலப் பத்திரங்களை அடகு வைத்து ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்