ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு பொங்கல் விழா கைப்பந்து போட்டி

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினருக்கு கைப்பந்துப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட ஆயுதப்படை, கமுதி தனி ஆயுதப்படை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேசுவரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 7 உட்கோட்டங்களில் இருந்து தலா ஒரு அணி, சிறப்புப் பிரிவுகளில் இருந்து ஒரு அணி என மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன.

காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். லீக் ஆட்டங்களின் முடிவில் சிறப்புப் பிரிவுகள் அணியும், ராமநாதபுரம் ஆயுதப்படை அணியும் இறுதிப் போட் டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இறுதிப்போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொங்கல் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டி ஏற்பாடுகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசிங், ஆயுதப்படை டி.எஸ்.பி ராஜ மோகன், ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் செய்தி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்