திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் குடவாசலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சிறைசெல்வன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கிட்டு முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் வடிவழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
குடவாசல் பேருந்து நிலையத்தில் உடனடியாக கழிப்பிட வசதியை பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட மயானத்தில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago