விவசாயிகளின் நெடும்பயணம் தஞ்சையில் நிறைவு

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கக் கோரியும், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், நீதி கேட்டு நெடும்பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தக் குழுவினர், திருவாரூர் வழியாக நேற்று மாலை மன்னார்குடியை வந்தடைந்தனர். அப்போது, பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

முதல்வர் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து, தொடர்ந்து வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக பேசினால், அவரை ஜெயலலிதாவின் ஆன்மாவே மன்னிக்காது என்றார். தொடர்ந்து தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை அருகே நேற்று இரவு நெடும் பயணம் நிறைவடைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்