நெல்லை மாநகராட்சி சார்பில் செவ்வாய் தோறும் சிறப்பு குறைதீர் முகாம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், சாலை வசதி, பாதாள சாக்கடை மற்றும் பொது சுகாதாரம் குறித்தும், சொத்துவரி, காலிமனை வரி விதித்தல், பெயர் மாற்றம் செய்தல், கட்டிட அனுமதி, புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் முதலான சேவைப்பணிகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றுக்கு தீர்வு காண திருநெல்வேலி, பாளை யங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் ஆகிய நான்கு மண்டலங்களிலும் பிரதிவாரம் செவ்வாய்கிழமைதோறும் காலை 11.30 மணி மதியம் முதல் 1.30 மணி வரை அந்தந்த மண்டல உதவி ஆணையர் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் நிலுவை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடன் தீர்வு செய்யக்கூடிய இனங்களை அன்றே தீர்வு செய்திடவும், மற்ற மனுக்களுக்கு அதிகபட்சமாக 1 வார காலத்துக்குள் தீர்வு செய்திடவும், மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை வாரம்தோறும் ஆணையாளருக்கு தெரிவிக்கும் வகையில் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்