திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2018-19ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த தொடக்கப் பள்ளிகளுக்கான விருதுக்கு சோழவரம், புழல், ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 3 தொடக்கப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சோழவரம் ஒன்றியத்தில் பண்டிக்காவனூர் தொடக்கப் பள்ளியில் 11 மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது 90 மாணவர்களை சேர்த்ததற்காகவும், ஆங்கிலக் கல்வி முறை, சிலம்பம் உள்ளிட்ட சேவைகளுக்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மைத்ரேயிக்கு விருது வழங்கப்பட்டது.
இதேபோல் புழல் ஒன்றியம், திருவொற்றியூர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஆ.முத்துசெல்விக்கும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.குமாரவேலுவுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச் செல்வி வழங்கினார். இதில் சோழவரம் வட்டார கல்வி அலுவலர் ஆனி பெர்டீசியா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago