திருவெண்ணெய்நல்லூர் அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் கீர்த்தனா (12) . இவர் ஓசூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.இதே ஊரைச் சேர்ந்த கேசவன் மகள் மகாலட்சுமி (5) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை இறந்து விட்டார். இவருடைய பாட்டி சந்திரா வளர்த்து வந்தார்.

கரோனா ஊரடங்கால் இரு சிறுமிகளும் வீடுகளில் இருந்து வருகின்றனர். நேற்று மாலை சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் மார்கழி மாத பூஜைக்கு சென்றுள்ளனர். கோயிலுக்குச் சென்ற சிறுமிகள் இரவு 8 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோரும், உறவினர் களும் பல இடங்களி தேடி பார்த் தும் கிடைக்கவில்லை.

பின்னர் சிவன் கோயில் குளத்தில் சென்று பார்த்த போது,இரண்டு சிறுமிகளும் இறந்து குளத்தில் மிதந்து கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும் பொதுமக்களும் குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தால் சித்தலிங்கமடம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்