புதிய ஓய்வூதியம் ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன் தர்ணா நடந்தது.
மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானஅற்புதராஜ், சிங்கராயர், ஆரோக் கியராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் பேசினர்.
மாவட்டப் பொருளாளர் குமரேசன், துணைத் தலைவர் அமலசேவியர், துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்கு மார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மத்தியஅரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் நியமன வயதை 40-ஆக குறைத்ததை திரும்பப் பெற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா செய்தனர். மாவட்டத் தலைவர் து.ஞானசேகரன் தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சாமிநாதன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் க.ஒச்சுக்காளை, தோழமை சங்க நிர்வாகிகள் எம்.சந்திரன், க.நீதிராஜா, எஸ். பாலமுருகன், நிர்மல், கிருபாகரன், ச.மோசஸ் ஆகியோர் பேசினர்.மாவட்டப் பொருளாளர் சி.பெரியகருப்பன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago