போரில் ஊனமடைந்த கிருஷ்ணகிரி ராணுவ வீரருக்கு ரூ.5 லட்சம் கருணைத் தொகை

By செய்திப்பிரிவு

காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில் ஊனமுற்ற கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு கருணைத்தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தமேலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ராணுவ வீரர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி, காஷ்மீரில் ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் நடந்த போரில் கோவிந்தராஜ் பங்கேற்றார். அப்போது, கோவிந்தராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு ஊனமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜுக்கு கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரர் கோவிந்தராஜூக்கு, ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்