பர்கூரில் இயற்கை உணவுத் திருவிழா

By செய்திப்பிரிவு

பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயற்கை உணவுத் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசுப் பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்ற உணவுத் திருவிழா போட்டி நடந்தது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) செல்வம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றியக்குழு தலைவர் கவிதா கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவுத் திருவிழாவில் இயற்கை முறையில் தயாரிக் கப்பட்ட உணவுப் பொருட்கள், கம்பு ரொட்டி, கேழ்வரகு ரொட்டி, கம்மங்கூழ் உள்ளிட்டவை செய்திருந்தனர். மேலும், நெருப்பில் வேக வைக்காத காய்கறிகள்,கீரை வகைகள் காட்சிக்கு வைத்திருந்தனர்.

உணவுத் திருவிழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் பழனிசாமி, பால்ராஜ், வட்டார குழந்தைகள் நல அலுவலர் வனிதா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சாந்தகுமாரி ஆகியோர் சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்தனர்.

மேலும், இயற்கையான உணவுகளில் கிடைக்கும் சத்து குறித்து எடுத்துரைக்கப்பட்டது. உணவுத் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உணவு அளிக்கப்பட்டது. உணவுத் திருவிழாவில், பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப் பாளர் கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்