செவிலியர் பட்டயப்படிப்பில் சேர பழங்குடி மாணவிகளுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையினர் மூலம் 2019-20-ம் ஆண்டுக்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்படிப்புக்காக, இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர், தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில், செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து 3 ஆண்டுகள் கல்வி பயில ஆகும் கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் வகையில் அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளியில் கல்வி பயின்றுள்ள பழங்குடியின மாணவிகளில், மார்ச் 2020-ல் 12-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செவிலியர் பட்டயப்படிப்பில் சேர, 12-ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்(40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்), சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறை எண்.26-ல் நேரடியாகவோ வரும் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்