நெருப்பரிச்சல் வாவிபாளையம் டாஸ்மாக் கடையை மூட மீண்டும் பொதுமக்கள் மனு

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகளை ஆறு முறை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பரிச்சல் வாவிபாளையம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், "எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

அரசுத் தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, 90 நாட்களில் கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் கடையை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன்பிறகு போராட்டக் குழு சார்பில் ஆட்சியர் உள்ளிட்டோரை 5 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்