பறவைக் காய்ச்சல் எதிரொலி பல்லடம் கறிக்கோழி விலை சரிவு

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, பல்லடம் கறிக்கோழி விலை கிலோ ரூ.72-ஆக சரிவடைந்துள்ளது.

கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக, திருப்பூர் மாவட்ட கேரள எல்லையான உடுமலை ஒன்பதாறு சோதனைச்சாவடி பகுதியில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் கோழிப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும்வாரந்தோறும் 60 லட்சம் கிலோகறிக்கோழி உற்பத்தி செய்யப்படு வதாக, கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் பரவலாக அனுப்பிவைக்கப்படுகிறது.

பல்லடம் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் விலை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, கறிக்கோழி விலை சரிவை சந்தித்துள்ளது.

நேற்று முன்தினம் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.14 குறைந்திருந்த நிலையில், நேற்றும் ரூ.6 சரிந்தது.அதேபோல, கடந்த மூன்று நாட்களாக பல்லடத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படா ததால், 3 லட்சம் கிலோ கறிக் கோழிகள் தேக்கமடைந்ததாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள னர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து தற்போது ரூ.72 -க்கு விற்பனையாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்