‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, விழுப் புரம் மத்திய மாவட்டத்தில் நேற்று இரண்டு நாள் பிரச்சார பயணத்தை தொடங்கினார். நேற்று காலை திமுக இளைஞரணி நிர்வாகிகள் இடையே அவர் பேசியது:
திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் இளைஞரணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பதவி கிடைத்து விட்டது என்று சும்மா இருக்கக் கூடாது. தேர்த லுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால், உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. நீங்களும் அதனை உறுதியோடு ஏற்று செயல்பட வேண்டும்.
அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதி ஏற்க வேண் டும் என்றார்.
தொடர்ந்து, விழுப்புரத்தில் அரசுபோக்குவரத்து கழகம் எதிரே தொழிலாளர் முன்னேற்ற கழகபோக்குவரத்து தொழிலாளர்க ளைச் சந்தித்து பேசிய உதயநிதி, “திமுக ஆட்சியில், கடந்த 1999-ம் ஆண்டு பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முதன்முதலில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பென்சன் நிலுவை கொடுக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. விடுமுறை எடுக்காமல் உழைத்த நாட்களுக் கான உரிய பணம் தரப்படாமல் வருகை பதிவேட்டில் குளறுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர், விழுப்புரம் பழையபேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த உதயநிதி, அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசுகையில், “நான் பிரச்சாரம் செய்யும் போது வன்முறையை தூண்டுவதாக வழக்கு தொடர்ந்தார்கள். இப்போது ஆபாசமாக பேசுவதாக வழக்கு தொடர்ந்துள் ளனர். நான் ஆபாசமாக பேசுகி றேனா?
முதல்வரின் உறவினர் ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்றால், அவர், ‘எனக்கு சம்மந்திதான் உறவினர் இல்லை’ என்கிறார். வாக்கு கேட்டு வரும் அதிமுகவினரிடம், ‘ஜெயலலிதா எப்படி இறந்தார்?’ என கேளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து முகையூர்,திருக்கோவிலூர் பகுதிகளில் பொதுமக்களிடம் கலந்துரையா டினார்.
இந்நிகழ்ச்சிகளில் திமுகவின் மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி, கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந் திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன், மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ் செல்வன், துணை செயலாளர் அன்னியூர் சிவா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஏஜி சம்பத், புஷ்பராஜ், இளை ஞரணி அமைப்பாளர்கள் தின கரன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago