கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பொங்கல், தீபாவளி, கார்த்திகை தீபம், நவராத்திரி விழாக்களுக்குத் தேவையான மண் பாண்ட பொருட்கள், நாற்றுகளுக்கு தேவையான சிறிய அளவிலான தொட்டிகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றனர்.
நிகழாண்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொங்கல் பண்டிகைக்கான பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி திருநீலகண்டர் தெருவைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி தண்டபாணி கூறியதாவது:
தொழிலாளர்கள் பற்றாக் குறையால் பொங்கல் பண்டிகைக்குபானை தயாரிக்கும் பணியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பொங்கலுக்குத் தேவையான பானைகள் தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 நாட்களாக பனியின் தாக்கம் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், தயாரிக்கப்பட்டுள்ள பானைகள், அடுப்புகளை உலர வைக்க முடியவில்லை. மண்பாண்ட பொருட்களை சூளையில் வைத்து சுட முடியவில்லை. மழையால் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டு, எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago