கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இடும்போது நேரிடும் நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் தலா 5 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கும்பகோணம் அரசு மருத்துவ மனை, அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, அவர்லேடி மருத்துவமனை ஆகிய இடங் களில் சிறப்பு ஒத்திகை முகாம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி யில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆய்வு செய்தார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ச.மருததுரை, நகர் நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி மற்றும் எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருவாரூர் தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிறப்பு ஒத்திகை முகாம் நடைபெற்றதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, ராமலிங்கநகர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இனாம் குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அப்போலோ மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் ஒத்திகை முகாம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் நடை பெற்ற ஒத்திகை முகாமை ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டார்.
மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் எட்வினா, அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஏகநாதன், மருத்துவர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், உடையார் பாளையம் அரசு மருத்துவமனை, குமிழியம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரியலூர் தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் ஒத்திகை முகாம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மற்றும் குமிழியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் த.ரத்னா ஆய்வு செய்தார்.
சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சி.ஹேமசந்த்காந்தி, வட்டார மருத் துவ அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம் பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, துறைமங்கலம் நகர்நல மையம், லப்பைக்குடிக்காடு மற்றும் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் ஒத்திகை முகாம் நடைபெற்றது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் ப.வெங்கட பிரியா ஆய்வு செய்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் கீதா ராணி, சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி கஸ்தூரிபாய் தாய்சேய் நல விடுதி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், கரூர் அப்போலோ மருத்துவமனை ஆகிய இடங்களில் சிறப்பு ஒத்திகை முகாம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago