திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் ரூ.2.75 கோடி மதிப்பில் அதி நவீன சி.டி ஸ்கேன் இயந்தி ரத்தின் பயன்பாட்டை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்ட பிறகு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப் படும் சிகிச்சைகள் மீதான எதிர் பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
புதிய மாவட்டத்தின் தலை நகராக திருப்பத்தூர் இருந்தாலும், திருப்பத்தூர் அரசு மருத்துவ மனை வட்ட அளவிலான மருத்து மனையாகவே தொடர்ந்து இயங்கி வருகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.
திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் தினசரி 1,500-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்வதுடன், 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர் இங்கு ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த சி.டி ஸ்கேன் இயந்திரத்தை மாற்றி ரூ.2.75 கோடி மதிப்பில் அதி நவீன திறன் கொண்ட புதிய சி.டி ஸ்கேன் இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் இயந்திரத்தின் செயல்பாட்டை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும், சி.டி ஸ்கேன் இயந்திரத்தின் செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு விரைவில் ரூ.7.5 கோடி மதிப்பிலான முழு உடல் பரி சோதனை செய்திடும் வகையில், நவீன எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் அமைக்கப்படவுள்ளது.
அதேபோல், மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிகிச்சைக்கான மாவட்ட இடையீட்டு மையமும் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத் துக்கான புதிய மருத்துவக் கல்லூரி அறிவிப்பும் விரைவில் வெளியாகும்’’ என்றார். அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திலீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago