ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப் பாட்டில் உள்ள 216 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முக்கிய நீர்த்தேக்கங் கள், ஏரிகள் நிரம்பி வருகிறன. வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கமான மோர்தானா அணை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 88 கன அடி நீர்வரத்து அப்படியே கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
காட்பாடி அருகேயுள்ள ராஜா தோப்பு நீர்த்தேக்க அணையும் முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கு 13.07 கன அடி வீதம்வந்துகொண்டிருக்கும் நீர்வரத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், திருப்பத்தூர் மாவட் டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 23.84 கன அடி வீதம்நீர்வரத்து இருப்பதால் அதை அப் படியே வெளியேற்றி வருகின்றனர்.
நிரம்பிய 216 ஏரிகள்
வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 101 ஏரிகள் உள்ளன. இதில், 45 ஏரிகள் முழு கொள்ள ளவை எட்டியுள்ளன. 99 முதல் 91 சதவீதம் வரை 2 ஏரிகள், 90 முதல் 81 சதவீதம் வரை 3 ஏரிகள், 70 முதல் 51 சதவீதம் வரை 7 ஏரிகள் நிரம்பியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. இதில், 9 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 70 முதல் 51 சதவீதம் வரை 4 ஏரிகள் நிரம்பியுள்ளன.அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன. இதில், 162 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 99 முதல் 91 சதவீதம் வரை 2 ஏரிகளும், 90 முதல் 81 சதவீதம் வரை 23 ஏரிகளும், 80 முதல் 71 சதவீதம் வரை 30 ஏரிகளும், 70 முதல் 51 சதவீதம் வரை 62 ஏரிகளும் நிரம்பியுள்ளன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 216 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago