திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ்,சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்அமைச்சகம் மூலமாக கடந்தநவ. 25-ம் தேதி திருநங்கைகளுக்கான தேசிய போர்டல் (NationalPortal For Transgender Persons)தொடங்கப்பட்டது.
நாட்டில் எங்கிருந்தும் ஒரு திருநங்கை இந்த போர்டல்மூலமாக அடையாளச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெற,குறிப்பிட்ட சான்றுகளுடன்பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, இணையதளம் மூலமாக ஒப்புதல் வழங்கப்படும். பின், அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகளின் சான்றிதழ்மற்றும் அடையாள அட்டையை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எந்த நிலையிலும் விண்ணப்பத்தின் நிலையை விண்ணப்பதாரர் தெரிந்துகொள்ளலாம். ஏதேனும் காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், மீண்டும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் வசதி உண்டு. மேலும், இந்த போர்டல் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் மூன்று நிலைகளை உடையது. எனவே, திருநங்கைகள் சமுதாயத்தினர் அனைவரும் www.transgender.dosje.gov.in என்ற தேசிய போர்டல் மூலமாக பயன்பெறலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago