திருப்பூரில் 5 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கான மருந்தை முதல் கட்டமாக, கரோனாமுன்கள பணியாளர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகைகள் சென்னை உட்பட சில மாவட்டங்களில் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.8) நடைபெறுகிறது.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை, பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூர்டிஎஸ்கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் சரண் தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. ஒரு மருத்துவமனைக்கு 25 பேர் வீதம் 125 பயனாளிகளுக்கு தடுப்பூசிசெலுத்தப்படுகிறது.

இதற்கான பணிகள் தற்போது சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் டி.எஸ்.கே. நகர்ப்புறஆரம்ப சுகாதார நிலையத்தில்ஒத்திகைக்கான முன்னேற்பாடுகளை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.

மாநகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், மருத்துவர் ஜெயப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். இன்று தடுப்பூசி போடுபவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் 30 நிமிடம் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்