காஞ்சிபுரம், செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் சில மணி நேரங்கள் கனமழை பெய்ததால், பணிக்கு செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். மேலும், மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக வழிந்தோடியது. காஞ்சிபுரம் 7.40 மி.மீ., பெரும்புதூர் 9.40, உத்திரமேரூர் 5, வாலாஜாபாத் 6, செம்பரம்பாக்கம் 14, குன்றத்தூர் 41 மி.மீ மிட்டர் என மழையளவு பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் 29.10, செங்கல்பட்டு 13, மாமல்லபுரம் 14.70, திருக்கழுக்குன்றம் 7, மதுராந்தகம் 11, செய்யூர் 18.50, தாம்பரம் 30.50, கேளம்பாக்கத்தில் 31.8 மி.மீ என மழையளவு பதிவாகியுள்ளது. இதில், திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் அதன் சுற்றுப்புற கடலோரப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால் ஓஎம்ஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் நேற்றைய காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை 24 மி.மீ., திருவள்ளூர் 45, பூந்தமல்லி 103, ஜமீன்கொரட்டூர் 39, கும்மிடிப்பூண்டி 21, திருவாலங்காடு 35, திருத்தணி 32, ஆர்.கே.பேட்டை 2, பொன்னேரி 19,செங்குன்றம், சோழவரம் 8, பூண்டி 66, தாமரைப்பாக்கம் 11, பள்ளிப்பட்டு 35 மி.மீ என மழையளவு பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago