கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வெளியேறிய அதிகப்படியான உபரி நீர், வாய்க்காலின் கரை களில் உடைப்பை உண்டாக்கியது. சங்கராபுரம் வட்டம் தியாகராசபுரம் கிராமத்தில் விளை நிலங்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமானது. எவ்வளவு தண்ணீர் வெளியேறினாலும் அதனை தன்னுள் அடக்கி சேர்க்க வேண் டிய இடத்தில் சேர்க்கின்ற அளவுக்கு வாய்க்காலை சராசரியாக 10 மீட்டர் அகலம் கொண்டதாக மூதாதையர்கள் உருவாக்கியிருந்தனர்.
தண்ணீரின் வேகத்தை கட்டுப் படுத்த வாய்க்கால் செல்லும் வலது புறங்களில் சுமார் 0.55 செண்ட் பரப்பளவு கொண்ட இரண்டு குளங்கள் இருந்தன. ஒரு குளத்தை நிரப்பிவிட்டு உபரி நீர் மீண்டும் வாய்க்காலுக்கு வரும்.மீண்டும் மற்றொரு குளத்தை நிரப்பிவிட்டு, அதன் உபரி நீர் மீண்டும் வாய்க்காலுக்கு வரும்.
இதுபோன்ற திட்டமிட்டு, தொலைநோக்குடன் பாதுகாப்புநடைமுறைகளை வகுத்திருந்தனர். தற்போது சுயநல எண்ணம் கொண் டவர்கள் குளத்தையும் தூர்த்து விட்டார்கள். வாய்க்காலையும் 1.5 மீட்டராக குறுக்கிவிட்டதனால் இயற்கை அளித்த கொடையை நாம் பாதுகாக்க தவறிவிட்டதாக ஆதங்கப்படும் தியாகராசபுரம் பாசன சங்கத் தலைவர் திருப்பதி, கைக்கு எட்டியது, வாய்க்கு எட்ட வில்லை என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago