கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப் பட்டணத்தில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவியரின் பெற்றோரிடம், பள்ளிகளைத்திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. பள்ளியில் பத்தாம் வகுப்பில் 375 மாணவியரும், பிளஸ் 2-வில் 652 மாணவியரும் படித்து வருகின்றனர். 75 சதவீதம் பெற்றோர்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர். அதில், 95 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் எனவும், 5 சதவீதம் பெற்றோர்கள் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு கிருமி நாசினி வழங்கி, தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைத்து கருத்து கேட்கப்பட்டது.
ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந் தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago