10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் ஆதரவு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் கருத்துக் கேட்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 75 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், பள்ளிகளில் முதல் கட்டமாக10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வகுப்புகளை தொடங்குவது குறித்து தலைமையாசிரியர்களிடம் நேற்றுமுன்தினம் கல்வித்துறை அதிகாரிகள் கருத்து கேட்டனர். இதையடுத்து பெற்றோர், மாணவ, மாணவியரிடம் நேற்று 2-வது நாளாக கருத்து கேட்கப்பட்டது. கருத்து தெரிவிக்க வந்தவர்களிடம் சிறிய படிவம் அளிக்கப்பட்டது.

அதில் பெற்றோரின் பெயர், அலைபேசி எண் மற்றும் இரு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பள்ளிகளை திறக்கலாம் அல்லது பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்ற 2 கேள்விகளில் ஒன்றை டிக் செய்து அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

75 சதவீதம் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். இது தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்கடி மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட 319 பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து தெரிவிக்க பெற்றோருக்கு படிவங்கள் வழங்கப்பட்டன. அந்த படிவங்களை பெற்றோர் பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு பள்ளிகளில் கொடுத்தனர்.

இம்முறை பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 487 பள்ளிகளில் நேற்று காலையில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. பெற்றோர் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டனர்.

தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் இன்னும் குறைவான நாட்களே தேர்வுக்கு உள்ளதால் ஆன்லைன் மூலமே தேர்வுகளை நடத்துவது நல்லது என பல பெற்றோர் தெரிவித்தனர்.

அதே நேரம் க சமூக இடைவெளியை கடைபிடித்து, கட்டுப்பாடுகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து பாடம் கற்பித்து, பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் வலியுறுத்தினர்.

தென்காசி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்