திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய பசுமை ஆணைய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி மத்திய மற்றும் மாநில அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி இவ்வகை மீனினங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட மீன் வளர்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மீன் பண்ணைகளில் கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல்கெண்டை வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டைமீன்கள் போன்ற இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளர்க்கலாம். இவ்வகையான மீன்களைவளர்க்க மீன்வளத் துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பாக மீன்வள உதவி இயக்குநரை 0424-2221912 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, மீன் வளர்ப்பில் உள்ள பல்வேறு திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago