திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தியசோதனையில் ரூ.2.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.டி.ஒ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் சிறுபூலுவபட்டி 15-வேலம்பாளையம் சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கவுசல்யா உள்ளிட் டோர் அடங்கிய போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு சோதனை நடத்தினர்.அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறையிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் இடைத்தரகர்களிடம் ரூ.29 ஆயிரத்து 10 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்ஆர்.குமார் மற்றும் 5 பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி இரவு நடைபெற்ற சோதனையில் ரூ.60 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 2 பேர் மீது மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago