கட்டாய தீர்மானம்; ஊராட்சி தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒருமித்த கருத்துடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். எம்எல்ஏ ஆடலரசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆர்.பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 150 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிதியில் உயர்கோபுர மின்விளக்கு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை உள்ளாட்சித் துறைக்கு அனுப்ப வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

அத்தியாவசியமாக செய்யப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ள நிலையில், உயர்கோபுர மின்விளக்கு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யும் நோக்கில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்ற கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மேலும், ஊராட்சி அமைப்புகளை கட்டாயப்படுத்தி தீர்மானம் நிறைவேற்றுவது பஞ்சாயத்து ராஜ் விதிகளுக்கு புறம்பானது என்பதால் விரைவில் நீதிமன்றத்தை நாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்