டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட சிஐடியு தலைவர் மோகன் தலைமை வகித்தார். இந்தபோராட்டத்தில் பங்கேற்ற 21 பெண்கள் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற மறியல்போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பி.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். 5 பெண்கள் உள்ளிட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.இதுபோல், திருச்செந்தூரில் 17 பெண்கள் உள்ளிட்ட 46 பேர்கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். அகில இந்தியவிவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணி தொடங்கி வைத்தார்.மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 42 பெண்கள் உட்பட 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் சிஐடியு சார்பில் மறியல்போராட்டம் நடைபெற்றது. மாவட்டதலைவர் பி.சிங்காரன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago