பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் கருத்து கேட்புக்கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த கருத்து கேட்புக்கூட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இதில், பெரும்பாலான பெற்றோர் பள்ளி களை திறக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் திறக்கப் படாமல் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜனவரி மாதம் தொடங்கியும் திறக்க முடியாமல் இருப்பதால், அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களில் எதிர்காலம் பாதிக் கப்படும் என்ற நோக்கத்தால் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்காக பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கருத்து கேட்புக் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி (நேற்று) தொடங்கி 8-ம் தேதி வரை நடத்தலாம் என்றும், இந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு பள்ளி களை திறப்பது குறித்து ஆலோ சனைகளை வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பெற் றோர்களுடான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று தொடங்கின.

இதில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலை மையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு, தங்களது கருத்து களை பதிவு செய்தனர். இதில், பெரும்பான்மையான பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்றும், ஒரு சில பெற்றோர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே பள்ளிகளை திறக்கலாம் என கருத்து தெரிவித்ததாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கல்வித்துறை அதி காரிகள் கூறும்போது, ‘வேலூர் மாவட்டத்தில் 276 பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர் கள் படிக்கின்றனர். அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 224 பள்ளிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 223 பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக ‘ஆன்லைன்’ மூலம் கல்வி பயின்று வரும் மாண வர்கள் தங்களது கல்வி திறனை மேம்படுத்திக்கொள்ள பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என பெரும்பாலான பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், 85 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்கலாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று (நேற்று) தொடங்கிய கருத்துக்கேட்பு வரும் 8-ம் தேதி (நாளை) வரை நடைபெறும். அதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம். அதன்பிறகு, கல்வியா ளர்கள், சுகாதாரத் துறையினர் கலந்தாலோசனை செய்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்வார்கள். பள்ளி களை திறந்தால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்பதால், ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் அமரவைக்கவும் முடிவு செய்துள்ளோம்.

உணவு, குடிநீர், திண்பண்டங்கள் அனைத்தும் மாணவர்கள் வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அறிவுறுத்தியுள்ளோம். சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனு மதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அரசின் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்