கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழாவையொட்டி அன்னதானம் வழங்க அதிமுகவினர் எதிர்ப்பு இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம்

கனிமொழி பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் அன்னதானம் வழங்க சென்ற திமுகவினரை அதிமுகவினர் தடுத்ததால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக மகளிரணி தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி.-யின் பிறந்தநாள், கட்சியினர் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூரிலும் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனியில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழாவுக்கு, மாவட்டபொறுப்பாளர் க.செல்வராஜ்தலைமையில் நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று பகல் அன்னதானம் வழங்க வந்த திமுகவினரை தடுத்த அதிமுகவினர், தங்கள் பகுதியில் அன்னதானம் வழங்க வேண்டாம்என கோஷமிட்டனர். இதனால், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினர் மத்தியில்திருப்பூர் தெற்கு காவல் நிலையபோலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அன்னதானம் வழங்குதல்ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, விருப்பம் உள்ளவர்கள் அன்னதானம் பெறட்டும்,யாரும் தடுக்க வேண்டாம் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்