அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி அவிநாசி லிங்கம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் பலரும் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி உள்ளோம். இந்நிலையில், தனியாருக்கு சொந்தமானநிலத்தில் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும், அப்பகுதியில் மின்சாரக் கம்பிகளும் செல்வதால் ஆபத்தான சூழல் உருவாகும்.
குறிப்பாக, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமலும், ஆட்சியரிடம் உரிய அனுமதி பெறாமலும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அவிநாசி வட்டாட்சியர் ஜெகநாதன் கூறும்போது, "அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், உரிய அனுமதி பெற்ற பிறகு பணி தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார். இதையடுத்து கறவை மாடுகளுடன் விவசாயி வீடு திரும்பினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago