உப்பாறு அணைக்கு விரைவில் தண்ணீர் கொண்டுவர வலியுறுத்தல்

உப்பாறு அணைக்கு விரைவில் தண்ணீர் கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து 24 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அணையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம், ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அறிவித்தார்.

அதன்படி, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. உப்பாறு அணைக்கு விரைவில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கம், திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அர்ஜுனன், செயலாளர் சுந்தரசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவகுமார், முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்